Saturday, November 19, 2011

நினைவேடுகளை புரட்டியபோது ...



சொந்தங்களைப் பார்பதற்காய்
ஊருக்கு ஒரு நாள் வந்தாய்

உன் பாதச்சுவடுகள்
என் வீட்டுத் தோட்டத்திலும்
ஊற ஆரம்பித்தது ....

படித் திரிந்த பறவைகளின் பின்
ஓடித் திரிந்த நாட்களை நீ மறக்வில்லை.

மாமரம் பூத்து குலுங்குவது
உன் வருகைக்காய்
எனப்பார்த்து ராசித்தாய்.

நாம் மணல் வீடு கட்டி
இலைச்சோறு சமைத்தும்
வந்து போனதுன் நினைவுகளில்

உணர்வுள்ள உறவாய்
நான் நிற்பதை மட்டும்
ஏன் மறந்து போனாய் ?
நான் துகள்களாய்ச் சிதறி
வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றேன்...

2 comments:

  1. Hi..good.
    Meanings are hidden../a kind of sorrow is spilled out..not able to decode fully.

    ReplyDelete
  2. Actually a very old one written some 10 years back as was in my diary!
    Posted after doing some editing here and there :)

    ReplyDelete