Saturday, March 10, 2012

தூக்கியெரியப்பட்டது !

மிகவிருப்பட்டதாய் வாங்கியணிந்து
பலமுறை அழகுபார்த்து அழுக்காகிய பின்
அழுக்கானதாய்ச் சொல்லி
தூக்கியெரியப்பட்டது சட்டை
- மனித உறவுகளைப்போலவே

Wednesday, January 11, 2012

எனது காக்கை குருவிகள் ...


ஊர் சுற்றிப் பார்க்கையில்
வந்துபோனதொரு நினைவு ...
என்ன செய்து கொண்டிருக்கின்றன
எனது காக்கை குருவிகள் ?